பாலக்காடு : பாலக்காடு அருகே விளையாடிய கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அண்ணன்- தம்பி உயிரிழந்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது அகழி. இங்குள்ள கருவாரா பகுதியைச் சேர்ந்த அஜய்-தேவி தம்பதியரின் மகன்கள் ஆதிஅஜய் (7),அஜினேஷ் அஜய் (4). சிங்கரா துவக்கப்பள்ளியில் ஆதி அஜய் 2ம் வகுப்பும், அஜினேஷ் அஜய் எல்.கே.ஜி-யும் படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவரும் அஜய்யின் தங்கை மகனுடன் வீட்டின் மேல் தளத்தில் உள்ள சன் ஷைடில் ஏறி, இறங்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆதிஅஜய், அஜினேஷ் அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு கோட்டத்தரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, ஏற்கனவே சிறுவர்கள் இறந்து விட்டதாக என்று தெரிவித்தனர். சுவர் இடிந்து சகோதரர்கள் பலியான சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

