Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

63 வயது அண்ணன் மனைவியிடம் சில்மிஷம்: பிரபல ரவுடி அடித்து கொலை

கன்னியாகுமரி: 63 வயது அண்ணன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல ரவுடியை அடித்து கொன்ற அண்ணன் போலீசில் சரண் அடைந்தார். குமரி மாவட்டம் இரணியல் அருகே வடக்கு பேயன்குழியை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற ராஜன் (54). லாரி டிரைவர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை காலி செய்து திங்கள்சந்தை, நெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடியாக வலம் வந்தார்.

கடந்த 2023ல் குளச்சலில் மது அருந்தும் தகராறில் அருள்பாபி என்ற எழுத்தாளரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் போலீசார் ராஜனை கைது செய்தனர். அவரை ஜாமீனில் எடுக்க யாரும் வராததால் கழிவறைக்குள் டைல்ஸ்களை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஜாமீனில் வந்த ராஜன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான வடக்கு பேயன்குழி வந்தார்.

அங்கு கோயிலுக்கு சொந்தமான கலையரங்கத்தில் தங்கி வந்தார். விபத்தில் சிக்கியதால் கைத்தடி உதவியுடன் நடந்து வந்தார். இந்த நிலையில் வடக்கு பேயன்குழியில் அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணனின் (63) 55 வயது மனைவியிடம், ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.

தனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு கலையரங்கம் வந்து படுத்திருந்த ராஜனிடம் அத்துமீறல் குறித்து கேட்டார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரத்தில்கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்த கைத்தடியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் இரணியல் காவல் நிலையத்துக்கு சென்று கோபாலகிருஷ்ணன் சரண் அடைந்தார்.