Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக் விபத்தில் அண்ணன், தம்பி பலி

*சாலையோரம் கொட்டி கிடந்த மணலால் விபரீதம்

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை ஓரமாக கொட்டப்பட்டிருந்த மண் மீது பைக் ஏறியதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் வினோத்குமார் (27). வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரவணன் (18).

இருவரும் உறவினர்கள். நேற்று முன் தினம் இருவரம் சரவணம்பாக்கத்தில் இருந்து வீரட்டகரம் நோக்கி ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியசெவலை அரசு பள்ளி அருகே சாலை ஓரமாக கொட்டிக் கிடந்த மண் மீது பைக் ஏறியதில், நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி வினோத்குமார், சரவணன் ஆகிய இருவரும் நேற்று காலை உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். உயிரிழந்த வினோத்குமாரின் சித்தி மகன் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.