விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலையாகரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்(34). இவர் பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நேற்றுமுன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல திண்டிவனத்தில் நடந்த உங்களிடம் ஸ்டாலின் முகாமில் பட்டா மாற்றத்திற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சதிஷை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனத்தை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து திண்டிவனம் சப்-கலெக்டர் ஆகாஷ் நேற்று உத்தரவிட்டார்.