மதுரை: லஞ்சம் தர மறுத்ததால் தன் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு என கோழி தீவன நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் காவல் கண்காணிப்பாளர் தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement