டெல்லி: லஞ்சம் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி விஷால் தீப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்த புகாரில் சிக்கிய 2 கல்லூரி நிர்வாகிகளிடம் லஞ்சம் கேட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டது குறித்து கல்லூரி நிர்வாகிகள் அளித்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் விசாரணை முடிந்து வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் நீண்டகாலம் ED அதிகாரியை சிறையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி ஜாமின் தர மறுத்த பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆணை பிறப்பித்தனர்.
+
Advertisement


