காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன; தினமும் 20 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றன என முதல்வர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.