திருவனந்தபுரம் : மூளையை தின்னும் அமீபாவால் கேரளாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு அருகே பந்தீரம்காவு பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 மாத குழந்தை ஏற்கனவே பாதிக்கப்பட்டு கோழிக்கோட்டில் சிகிச்சை பெற்று வருகிறது. சுத்தமில்லாத கிணறு, நீர்நிலைகள், நீச்சல் குளத்தில் குளிப்பதால் மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
+
Advertisement