இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2024ல் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த அஸ்வின், சமீபத்தில் ஓய்வு பெற்றனார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.
இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.