Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதலன் மீது புகார் அளிக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசத்திற்கு அழைத்த விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய காதலன் மீது புகார் அளிக்க வந்த இளம் இன்ஜினியரை வாட்ஸ்அப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ ஆகியோரை கமிஷனர் அருண் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் இந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மென் பொறியாளரான இவர், கனடா நாட்டில் பொறியாளராக பணியாற்றும் நபரை காதலித்து வந்துள்ளார்.

அந்த பொறியாளர் சென்னை வந்தபோது, இந்துவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே காதலனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் சம்பவம் இந்துவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காதலர்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என கனடா இன்ஜினியர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்து, சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரித்தார். அப்போது புகார் அளித்த பெண் பொறியாளருக்கு நியாயம் பெற்று தருவதாக கூறி அவரிடம் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் ஆடம்பர பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து அதற்கான பணத்தை இந்துவை கட்ட வைத்துள்ளார். அதேபோல் புகார் அளித்த பெண்ணிடம் இருந்து காப்பாற்றுவதாக அவரது காதலனிடமும் கைது செய்யாமல் இருப்பதற்காக பல லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இளம்பெண் புகாரின் மீது கைது செய்யாமல் இருக்க காதலனுக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் பல வகையில் உதவி செய்துள்ளார். இதன் மூலம் முன்ஜாமீன் பெற்ற காதலன், சென்னையில் இருந்து கனடா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்த தகவல் பாதிக்கப்பட்ட இந்துவுக்கு தெரியவந்தது. உடனே விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் பெனசீர் பேகத்திடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. உடனே பாதிக்கப்பட்ட ராணி இணை கமிஷனர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் மற்றும் ஆன்லைன் மூலம் பல லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளித்தார்.

புகாரின் மீது விசாரணை நடத்த இணை கமிஷனர் தீஷா மிட்டல் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு உத்தரவிட்டார். அதன்படி பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர் இந்து, விருகம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பாலகிருஷ்ண பிரபுவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது உதவி கமிஷனர், பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, பெண் பொறியாளர் இந்துவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அடிக்கடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு ெபண் பொறியாளர் இந்துவும் பதில் அளித்துள்ளார்.

அதன் பிறகு அடிக்கடி தனது அலுவலகத்திற்கு விசாரணை என்ற பெயரில் பெண் பொறியாளரை அழைத்து தனது அலுவலகத்தில் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தன் வசப்படுத்தும் வகையில், இந்துவின் தோள் மீது கையை வைத்து ெதாட்டு தொந்தரவு செய்துள்ளார். அதேநேரம் புகார் அளித்த உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே உதவி கமிஷனர் ஒரு கட்டத்தில் பெண் பொறியாளரின் வாட்ஸ் அப்புக்கு ‘நீ அழகாக இருக்கிறாய்.... உன்னை பார்த்ததில் இருந்தே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.... நான் சொல்வதை நீ செய்தால்... நீ சொல்வதை நான் செய்கிறேன்.....’ என்று மிகவும் ஆபாசமாகவும், பாலுணர்வை தூண்டும் வகையிலும் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதை பார்த்த பெண் பொறியாளர் இந்து அதிர்ச்சியடைந்தார். உடனே இணை கமிஷனர் தீஷா மிட்டலை கடந்த 26ம் தேதி நேரில் சந்தித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். பெண் உதவி ஆய்வாளர் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பல லட்சம் பணம் பெற்று ஏமாற்றினார். அவர் மீது புகார் அளிக்க விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவிடம் புகார் அளித்ததால், அவர் தன்னை படுக்கைக்கு அழைத்து மெசேஜ் போடுகிறார். நான் என்ன தான் செய்ய ேவண்டும் மேடம் என்று அழுது புலம்பியுள்ளார்.

அதைதொடர்ந்து இணை கமிஷனர் தீஷா மிட்டல் புகார் அளித்த இளம்பெண் பொறியாளர் அளித்த வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் புகாரை தொடர்ந்து விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோர் மீதான புகார் குறித்து போலீஸ் கமிஷனர் அருண் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதை தொடர்ந்து, கமிஷனர் அருண், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி உயர் காவல் துறை அதிகாரிகள் உதவி கமிஷனர் மற்றும் உதவி பெண் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், புகார் அளிக்க வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பெற்ற பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் பெற்றதாக 5க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. புகார் அளிக்க வந்த இளம்பெண் பொறியாளரிடம் அநாகரிகமாக நடந்த சம்பவம் போலீசாரிடையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீ அழகாக இருக்கிறாய்.... உன்னை பார்த்ததில் இருந்தே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.... நான் சொல்வதை நீ செய்தால்... நீ சொல்வதை நான் செய்கிறேன்.....’ பல லட்சத்திற்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கி ஏமாற்றிய பெண் எஸ்ஐயும் சிக்கினார்.