ஈரோடு: சூரம்பட்டி அருகே குழந்தைகள் நல மையத்தில் இருந்து காணாமல்போன சக்கரவர்த்தி - சாந்தகுமாரி தம்பதியின் மகன் 6 வயது சிறுவனான சஞ்சய், பெரும்பள்ளம் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் சகோதரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அருகிலுள்ள பெரும்பள்ளம் ஓடை பகுதிக்கு சிறுவன் சஞ்சய் சென்றது தெரியவந்தது. சிறுவன் ஓடையில் தவறி விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை செய்தபோது சிறுவன் சஞ்சய் பெரும்பள்ளம் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
+
Advertisement
