திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு அளிக்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்பட்டது. வனராஜ், மணிகண்டன், கணேசனுக்கு வழங்கிய ஜாமினை திருவள்ளூர் நீதிமன்றம் ரத்து செய்தது. திருவள்ளுர் திருவாலங்காடு அருகே காதல் விவகாரத்தில் ஜூன் 7ல் சிறுவன் கடத்தப்பட்டார். காதல் விவகாரத்தில் இளைஞரின் சகோதரரை கடத்திய பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்தனர். மூவரின் ஜாமினை ரத்து செய்யக் கோரி சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவில் திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
+
Advertisement