சென்னை: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் 7ம் வகுப்பு மாணவி ஏ.யோசிதா, 9ம் வகுப்பு மாணவன் டி.கங்கைகொண்டான், 12ம் வகுப்பு மாணவன் டி.யோகி வர்மன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதற்கான ஏற்பாட்டை மநீம விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் ஈ.டி.அரவிந்தராஜ் செய்திருந்தார். அப்போது மாணவி ஏ.யோசிதாவுக்கு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேவையான உதவிகளை, கமல் பண்பாட்டு மையத்தின் மூலம் கமல்ஹாசன் வழங்கினார். தொடர்ந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் சிட்டியில் கடந்த ஜூலை 18ம் தேதி 9 நாடுகள் பங்கேற்ற ஆசிய அளவிலான ‘பவர் லிப்டிங்-ஏஷியன் சாம்பியன்ஷிப் 2025’ போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் வென்று, ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்கும் ம.கார்த்திக், லத்திபா சிராஜுதீன் ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மநீம பொதுச்செயலாளர் ஆ.அருணாசலம் உடனிருந்தார்.
+
Advertisement