சென்னை: பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடத்த இருக்கும் புத்தக கண்காட்சியின் ஒரு முன்னேற்றமாக, சென்னை சர்வதேச புத்தக் கண்காட்சி, போலோக்னா குழந்தைகள் புத்தக் கண்காட்சி அமைப்புகள் ஒன்றாக இணைந்து புத்தக கண்காட்சியை நடத்த தங்கள் கூட்டணியை மீண்டும் புதுப்பித்துள்ளன. இந்த கூட்டணியின் மூலம் தமிழ்நாட்டுக்கும், இத்தாலிக்கும் இடையே கலாச்சார மற்றும் இலக்கிய பரிமாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இதற்கான உயர்மட்டக் குழுக்கூட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது. இத்தாலி நாட்டின் தரப்பில் போலோக்னா குழந்தைகள் புத்தக கண்காட்சியின் இயக்குநர் எலினா பசோலி, போலோக்னா புக் கிளப்பின் சிறப்பு விருந்தினர் ஜாக்ஸ் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2025ல் தொடங்கப்பட்ட கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. வரும் ஆண்டுக்கான காட்சிகளை நடத்துவதற்கான வழிவகைகளையும், விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பு, தமிழ் இலக்கியம், கலை மற்றும் அதன் புலமைகளை உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எடுத்து செல்லவும், சர்வதேச இலக்கிய மரபுகளை சென்னைக்கு கொண்டு வரவும் நிச்சயம் உதவும்.