திருவள்ளூர்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பில் ஆவடியில் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எண்ணை ஆய்வுசெய்த போது ஆவடியில் மளிகை கடைக்காரர் ஜெயக்குமார் என்ற முதியவரின் எண் என தெரியவந்தது. முதியவர் ஜெயக்குமாரிடம் மர்ம நபர் செல்போனை வாங்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement