சென்னை: கோலாலம்பூர், அபுதாபியில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களும் சென்னையில் தரை இறங்கியதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து 3வது நாளாக சென்னை வரும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+
Advertisement

