மும்பை: ஷில்பா ஷெட்டியை அமெரிக்கா செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.60 கோடியை செலுத்த மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கி உள்ளது. தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்தரா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல அனுமதி கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்துசெய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் ஷில்பா ஷெட்டி மனு அளித்தார்.
+
Advertisement