சென்னை: வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது போன்ற வெடி குண்டு மிரட்டல்கள் தொடர்பான தகவல்கள் வந்தால் பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை. சென்னை பெருநகர காவல்துறையினர் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
Advertisement