டெல்லி :ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் போயிங் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில், "விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், எங்கள் வாடிக்கையாளருக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம்" என்று கூறியுள்ளது.
Advertisement