புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
ஈரோடு: புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை இறுதி மரியாதை செலுத்தினர். புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.


