கோவை: கோவையில், பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டியின்போது,
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவின் கைப்பாவை சிபிஐ என விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘உச்சநீதி மன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா, அவர் அதை பாலோ பண்ணட்டும் என்றார்.
நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு எடப்பாடி வராதது குறித்த கேள்விக்கு, அதுபற்றி நாங்களே கவலைப்படவில்லை. தேஜ கூட்டணிக்கு இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வரப்போகிறார்கள். நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் யாருக்கும் வலை எல்லாம் வீசுவதில்லை என்றார்.