Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அச்சத்தை ஏற்படுத்தும் பாஜகவின் தந்திரம் தகர்ப்பு: ராகுல் காந்தி பதிவு

டெல்லி: 7 மாநில இடைத்தேர்தல்கள் மூலம் மக்களிடம் குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் தந்திரம் தகர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றிய நிலையில் இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்; 7 மாநில இடைத்தேர்தல்கள் மூலம் மக்களிடம் குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் தந்திரம் தகர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மாத ஊதியம் பெறுவோர் சர்வாதிகாரத்தை ஒழிக்க வேண்டும். சர்வாதிகாரத்தை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மேம்படவும், அரசியலமைப்பை காக்கவும் இந்தியா கூட்டணியை முழுமையாக ஆதரித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.