புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் நீண்டகாலமாக போற்றப்பட்டு கடினமாக கட்டமைக்கப்பட்ட ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ சதி முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜ நேரடியாக வாக்காளர்களை தேடி வருகின்றது. சீர்திருத்தம் என்ற போர்வையில், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான வாக்குரிமையை பறிப்பதற்கான ஒரு கருவியாக தேர்தல் சூழ்ச்சியை பயன்படுத்துகின்றது. பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக லட்சக்கணக்கான மக்களை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினை வாக்கு உரிமையில் இருந்து நீக்குவது முதல் ராகுல்காந்தி அம்பலப்படுத்திய வாக்குத்திருட்டு வரை பாஜ தேர்தல்களின் நேர்மையை சிதைத்து வருகின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement