Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவை நம்பி காதலர்கள் சென்று விட வேண்டாம்: சண்முகம் அறிவுரை

மதுரை: மதுரையில் நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில், சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பது தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகியவற்றை சாதிய கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி வழக்கு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்று தருவதில், போலீசார், அரசு அதிகாரிகள், அலுவலர்களின் அணுகுமுறை மாற வேண்டும். சாதிய பிளவுகளை பயன்படுத்தியே பாஜ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பெற்றது. அவர்களின் இந்த வளர்ச்சி ஆபத்தானது. வரவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான தனி சட்டத்தை இயற்ற அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

பின், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எந்த மதமாகவும், ஜாதியாகவும் இருந்தாலும் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் சட்டப்படி திருமணங்கள் செய்து வைக்கப்படும். எங்களை பார்த்து, காதல் திருமணம் செய்ய விரும்புவோர் பாஜ அலுவலகம் வரலாம் என அண்ணாமலை கூறியுள்ளார். காதலர்கள் யாரும் அண்ணாமலை பேச்சை கேட்டு பாஜ அலுவலகத்திற்கு சென்று விடாதீர்கள். அவர்கள் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரானவர்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக அண்ணாமலை இப்படி சொல்லி இருக்கிறார்’’ என்றார்.