Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாஜ மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா மரணம்

புதுடெல்லி: டெல்லி பாஜவின் தலைவராக இருந்தவர் விஜய் குமார் மல்ஹோத்ரா (93), இவர் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை டெல்லி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்ஹோத்ரா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

பிரதமர் மோடி மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் மல்ஹோத்ராவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.