கோவை: கோவை மாவட்டம் கொலை வழக்கு பாஜக மண்டல துணை தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தகராறில் நடைபெற்ற கொலை வழக்கில் பாஜக கணபதி மண்டல துணைத்தலைவர் குட்டி என்கின்ற கந்தசாமி என்பவருக்கு கோவை கூடுதல் மாவட்டம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோயம்பத்தூர் மாவட்டம் காவல்நிலையம் சரகத்திற்கு உட்பட்ட கணபதிக்காரர் தோட்டம் 7 ஏக்கர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முடிந்து அன்று இரவு கிடாவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் குறித்து அதில் நாகராஜ் என்பவர் கந்தசாமியிடம் வசூல் சம்மந்தமாக கேட்டுருக்கிறார்.
அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் நாகராஜ் வந்தஇடத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதில் நாகராஜ் கடுமையான காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதை கொலை வழக்காக பதிவு செய்து ஆலந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து தற்போது நீதிமன்ற காவல் நிலையத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.