கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் அடிமையாகிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஏஜென்ட் போன்று தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மேற்குவங்க வாக்காளர் பட்டியலை பாஜக வாக்காளர் பட்டியலாக மாற்ற ஆணையம் உதவுகிறது. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மே.வங்கத்தில் வாக்காளர்களை நீக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
+
Advertisement