புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடுத்த பொம்மாடிமலை தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர் ரகுபதி இன்று அளித்த பேட்டி: 41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டு விட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மதுரை உயர் நீதிமன்ற கிளையின் நீதியரசர் செந்தில்குமார் என்ன கூறினார் என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைகுனிய விடவில்லை என்பது தெரிகிறது.
சாத்தான் வேதம் ஓதுவதை போன்று தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பாஜக, ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறது. பாஜகவின் சீ டீம் தான் விஜய். இதை நான் தான் முதலில் கூறினேன். விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டியதில்லை. சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.