காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று அளித்த பேட்டி: மதிமுகவில் இருந்து ஒருவர் (மல்லை சத்யா) வெளியேறி செல்ல வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டார். முறையாக வாக்கெடுப்பு நடத்தி துரை வையாபுரி கட்சிக்கு கொண்டு வரப்பட்டார். தற்போது குற்றம் சாட்டும் நபர் உண்மைக்கு மாறாக பேசுகிறார். திமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுடன் தான் என்றும் இருக்கிறேன். ஒரு சில பத்திரிகைகளில் பாஜவுக்கு தூது விடுவதாக வரும் செய்தி பெரிய பொய்.அரசியலில் விமர்சிக்க வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்டுகளை வசை பாடுகிறார். அவர்கள் தியாகம் செய்தவர்கள். பல பேராட்டங்களை கண்டவர்கள். ரத்தம் சித்தியவர்கள். அவர்கள் கொள்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவர்களை புழுதிவாரி தூற்றி பேசுவது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல. பிறகு உங்கள் இயக்கத்தை பற்றி ஜெயலலிதா பற்றி அவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்? இனிமேலாவது இப்படி பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இவ்வாறு கூறினார்.
Advertisement