Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி: மதுரை ஆதீனம் பேட்டி

மதுரை: பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பாரத பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி, வாழ்த்துக்கள். தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் தமிழக மக்களின் முடிவெடுத்தது சரியானது.

தற்போது பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது என்ற கேள்விக்கு? காமராஜரையே தோற்கடித்தார்கள் அது தான் ஜனநாயகம், ஆட்சியில் இருந்தால் திட்ட தான் செய்வார்கள் எனவும், திட்ட திட்ட திண்டுக்கல்லு வைய வைய வைரக்கல்லு , ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார் என்றார்.

அயோத்தில் பாஜக தோல்வி குறித்த கேள்விக்கு?

அயோத்தியில் பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள்., இது ஜனநாயக நாடு வெற்றி தோல்வி மக்கள் அளிப்பது தான், மக்களிடம் பாஜக மீது அதிருப்தி இல்லை என்றார்.

இலங்கைக்கு நான் சென்றால், என்னை சுட்டு விடுவர். இலங்கை யில் தமிழர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இருந்தாலும் சிங்கள வெறியர்கள் இருக்கின்றனர். பிரதமர் மோடி, சிவன் மீது பக்தியாக இருக்கிறார்; தியானம் செய்கிறார்; விபூதி பூசிக் கொள்கிறார். காசி விஸ்வநாதர் கோவிலை மீட்டெடுத்தார்; எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன்.

தேர்தலில் பா.ஜ., வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. அக்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. பா.ஜ., நாம் தமிழர் கட்சிகள் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. இது தான் நடந்து முடிந்த தேர்தல் வெளிப்படுத்தும் செய்தி என்று கூறினார்.