உத்தரபிரதேசத்தில் நடந்த அவமானம்; சுடுகாட்டில் காருக்குள் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த பாஜக நிர்வாகி: அரை நிர்வாண நிலையில் கையும் களவுமாக சிக்கினர்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சுடுகாட்டில் காருக்குள் வைத்து பெண்ணிடம் பாஜக நிர்வாகி உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோகர்லால் தாக்கர், டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பெண் ஒருவருடன் காரில் தகாத உறவில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மனோகர்லால் தாக்கர் மற்றும் அந்தப் பெண் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான, இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், இதேபோன்ற வெட்கக்கேடான சம்பவம் உத்தரப் பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்தஷெஹர் மாவட்டம், கைலாவன் கிராமத்தில் உள்ள மயானத்தில், பாஜகவின் பட்டியல் அணி மாவட்டச் செயலாளரான ராகுல் வால்மீகி, திருமணமான பெண் ஒருவருடன் காரில் அரைநிர்வாண நிலையில் தகாத உறவில் ஈடுபட்டபோது கிராம மக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.
அப்பகுதி மக்கள் இருவரின் வீடியோவை எடுக்கத் தொடங்கியதும், அந்தப் பெண் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்ள, ராகுல் வால்மீகி மன்னிப்புக் கேட்டு கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாநில பாஜக மேலிடம் ராகுல் வால்மீகியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும், புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் செயலில் ஈடுபட்ட ராகுல் வால்மீகி தற்போது தலைமறைவாகிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.