டெல்லி: நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக குற்றம் சாற்றியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாட்டில் பெரும்பாலான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் பா.ஜக. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால்தான் உருவாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சர்தார் பட்டேல் தடை விதித்ததை குறிப்பிட்ட கார்கே. அவர் முன்னெடுத்ததை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
பாடப் புத்தகங்களிலிருந்து மகாத்மா காந்தி படுகொலை குறிப்புகள், கேட்சே, ஆர்.எஸ்.எஸ். குறித்த விவரங்களை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதாகவும். பாடப் புத்தகங்களிலிருந்து உண்மையை நீக்குவது சரியல்ல. இது அவர்களின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துவதாகவும் விமர்சித்தார். பா.ஜ.க.வினர் எப்போதும் பொய்யை உண்மையாக்குவதை முயற்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும். பொய் சொல்வதில் பிரதமர் மோடி நிபுணத்துவம் பெற்றவர், அவரை பின்பற்றுவர்களும் அதே பாதையில் நடப்பதாகவும் கார்கே விமர்சித்தார். நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக குற்றம் சாட்டினார்.
