கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று அளித்த பேட்டி: தவெகவில் இணைய செங்கோட்டையன் எடுத்த முடிவு, அவரின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. செங்கோட்டையன் இணைவதால் பலமா, பலவீனமா? என்பதை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெறும் வாக்குகளை பொறுத்து தான் சொல்ல முடியும். அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜவின் ஆசை.
அந்த ஆசை இன்றல்ல நேற்றல்ல. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரே அதிமுகவை பிளவுபடுத்தினர். சட்டமன்றத் தேர்தல் சீட், கூட்டணி குறித்து நான் முடிவெடுக்க முடியாது. மதிமுக தலைவர் வைகோ, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசி முடிவு எடுப்பார்கள். ஒரு இயக்கத்தின் அடையாளம் என்பது அக்கட்சியின் கொடி சின்னம் தான். எங்களுடைய சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது மதிமுக தொண்டர்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

