Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பிட்ஸ்

பகுமானமாய் பவுமா 148 ஆண்டு சாதனை

கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 30 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இது, கேப்டனாக டெம்பா பவுமா, தொடர்ச்சியாக பெறும் 10வது வெற்றியாகும். அவரது தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10ல் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது. இதன் மூலம் 148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தோல்வி அடையாமல் 10 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை டெம்பா பவுமா அரங்கேற்றி உள்ளார்.

ஆர்ஆர் தலைமை கோச்சாக சங்கக்கரா நியமனம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் இடம்பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, கடந்த 2021-2024 ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சங்கக்கரா பதவி வகித்தார். அதன் பின் அவர் கிரிக்கெட் இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் வேகப்பந்து பயிற்சியாளராக கடந்த 2024ல் சேர்ந்த ஷேன் பாண்ட், அந்த பணியில் தொடர்வார் என்றும் ஆர்ஆர் அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

சுப்மன் கில்லுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி?

கொல்கத்தா: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். அவர் ஆடிய கடைசி பந்தை பவுண்டரி அடித்தபோது, கழுத்தில் கடுமையான சுளுக்கு ஏற்பட்டு வலியால் துடித்தார். அதன் பின், அன்றைய போட்டி முழுவதும் ஆடவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் சுப்மன் கில், 2வது டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போனால், அவருக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்குவார் என தகவல்கள் கூறுகின்றன.