Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிட்ஸ்

* கேமரூன் வெளியே லபுஷனே உள்ளே

பெர்த்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது. முதல் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில், மார்னஸ் லபுஷனே ஆஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஸி கிரிக்கெட் அணி நிர்வாகிகள் கூறுகையில், ‘கிரீன் குறுகிய காலம் சிகிச்சையில் இருப்பார். நலம் பெற்ற பின் விரைவில் இங்கிலாந்துடனான ஆஷஸ் கோப்பை போட்டிகளுக்கான பயிற்சிகளில் அவர் ஈடுபடுவார்’ என தெரிவித்தனர்.

* சச்சினை முறியடிப்பாரா கோஹ்லி?

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (36) இடம்பெற்றுள்ளளார். இந்தாண்டு துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், கடந்த 2024ல் டி20 போட்டிகளில் இருந்தும் கோஹ்லி ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 51 சதங்களை விளாசியுள்ள கோஹ்லி, மேலும் ஒரு சதம் அடித்தால் ஏதேனும் ஒரு வடிவ கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் விளாசி இந்த சாதனைப் பட்டியலில் முதலில் உள்ளார்.

* எனக்கு எண்டே கிடையாது... ஜோகோவிச் திட்டவட்டம்

ரியாத்: செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவர் சமீப காலமாக நடந்து வரும் போட்டிகளில் அரை இறுதி அல்லது இறுதிப் போட்டி வரை சென்ற பின்பும் கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறார். அதனால், ஜோகோவிச் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவார் என யூக செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில், ‘மனவுறுதியுடன் நீடித்து நிற்பதே எனக்கு ஊக்கம் தரும் ஆற்றலாக திகழ்ந்து வருகிறது. டென்னிஸில் எந்தளவுக்கு செல்ல முடியும் என பார்க்கப் போகிறேன். ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’ என அவர் கூறியுள்ளார்.