இணைய சேவை இல்லாமல் CHAT செய்யும் வகையில் “BITCHAT” என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், ‘பிட்சாட்’ பயன்பாட்டில், பயனர்களுக்கு தொலைபேசி எண்ணோ அல்லது அக்கவுன்டோ தேவையில்லை. இந்த பயன்பாடு முற்றிலும் சாதனத்திலிருந்து சாதனத்திற்கு இடையிலான தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. தற்சமயம் இந்த செயலி ஐபோன் பயனாளர்களுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்பாடு முழுமை அடைந்ததும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கொடுக்கப்படும். இயற்கை சீற்றம், நெட்வொர்க் பிரச்சனை மற்றும் அவசர காலங்களில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்குத் தகவல் பரிமாற இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக இணைய வசதியே இல்லாத இடங்களில் குற்றங்கள் மற்றும் கடத்தல் பிரச்சனைகளுக்கு காவல் உதவி நாட, அவசர அழைப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்கிறது டிஜிட்டல் உலகம்.