புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புடின் நல்ல ஆரோக்கியத்துடனும், புடின் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள 23வது இந்தியா ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்கு வருகை தரும்படி புடினுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
+
Advertisement