தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களில் 81% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களில் 81% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துளளது.'2011 செப். 8 முதல் 2025 அக். 31 வரை 211 சட்ட மசோதாக்கள் பெறப்பட்டு அதில் 170 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல். 73 சட்ட மசோதாக்களுக்கு ஒரு வாரத்திலும், 61 சட்ட மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒப்புதல். 27 மசோதாக்களுக்கு 3 மாதத்திலும், 9 சட்ட மசோதாவிற்கு 3 மாதத்திற்கு மேல் கால அவகாசத்தில் அனுமதி. 13% மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது' என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

