புதுடெல்லி: அமெரிக்காவின் தலைமை வர்த்தக பிரதிநிதி இந்தியா வருகை தந்துள்ளார். இந்தியா -அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் கடந்த மாதம் 25 முதல் 29ம் தேதி வரை திட்டமிடப்பட்டு இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தைஅமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்ததை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 6வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்காவின் தலைமை வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நேற்று இந்தியா வந்தார். இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
+
Advertisement