துபாய்: இளைய தலைமுறையினரின் கனவுகளில் மிக முக்கியமானவைகளில் ஒன்று பைக் வாங்குவது. பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த பைக்குகளை வாங்கி மகிழ்வார்கள். அதுவே பைக் தங்கத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதற்கு என தனிக்கூட்டம் முந்தும்தானே... அவ்வாறான ஒரு சம்பவம் துபாயில் நடந்துள்ளது. துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது.
இதில் சுசுகி நிறுவனம், தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தியது. மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த பைக்கை முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர். இதன் விலை ரூ.1.67 கோடியாம். இதனை வாலிபர்கள் சுற்றி சுற்றி வலம் வருவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
