கேடிஎம் 390 அட்வஞ்சர் மற்றும் 390 அட்வஞ்சர் எக்ஸ் ஆகிய மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்பில், 350 சிசிக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு ஜிஎஸ்டி 31 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பஜாஜ் நிறுவனம் மேற்கண்ட பைக்குகளின் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி 390 அட்வஞ்சர் எக்ஸ் பைக்கின் விலை ரூ.3.04 லட்சத்தில் இருந்து ரூ.3.26 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.22,410 உயர்ந்துள்ளது. ஸ்டாண்டர்டு வேரியண்டான 390 அட்வஞ்சர் பைக் ரூ.27,000 உயர்த்தப்பட்டு, ரூ.3.68 லட்சத்தில் இருந்து ரூ.3.95 லட்சமாகியுள்ளது.
+
Advertisement

