ஷேக்புரா: பீகார் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் சார்பில் வாக்காளர் அதிகார யாத்திரை நடந்தது. தர்பங்காவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு நபர் பேசினார். இந்த வழக்கில் ராகுல் காந்தி, ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சியின் முகேஷ் சஹானிக்கு எதிராக பீகார் பாஜ ேஷக்புரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், முகேஷ் சஹானி ஆகியோர் நவம்பர் 26 அன்று நேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார்.
+
Advertisement