Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பீகாரில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே ஒவ்வொரு மின்னணு இயந்திரத்திலும் 25 ஆயிரம் ஓட்டுகள் இருந்தன: லாலு கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே ஒவ்வொரு மின்னணு இயந்திரத்திலும் 25 ஆயிரம் வாக்குகள் இருந்ததால் லாலு கட்சி குற்றம் சாட்டி உள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வென்ற லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று பாட்னாவில் நடந்தது. இதில் தேர்தலில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். தேஜஸ்வி யாதவ், அவரது தந்தை மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், தாயார் ரப்ரி தேவி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்ஜேடி சட்டப்பேரவை கட்சித்தலைவராக தேஜஸ்வியாதவ் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கூறுகையில்,’ பீகார் தேர்தலின் தீர்ப்பு கள நிலைமைக்கு ஏற்ப இல்லை. அரசாங்கத்தின் மீது மக்களுக்கு கோபம் இருந்தபோதிலும், அவர்களுக்கு இவ்வளவு பெரிய மெகா வெற்றி தீர்ப்பு கிடைத்துள்ளது.

மக்களாலும், அரசியல்வாதிகளாலும் இதை ஜீரணிக்க முடியவில்லை. கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து ஆர்ஜேடி வேட்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் கட்சி சார்பில் நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார். மூத்த தலைவர் ஜெக்தானந்த் சிங் கூறுகையில்,‘வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 25,000 வாக்குகள் இருந்தன. இதையும் மீறி நாங்கள் 25 இடங்களை வெல்ல முடிந்தது. நாடு எங்கு செல்கிறது என்பதை இது காட்டுகிறது. ஜனநாயகம் ஒரு வர்த்தகமா?ஜனநாயகம் என்பது அரசியலமைப்பின் ஒரு நிறுவன ஏற்பாடு. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியலமைப்பை ஏமாற்றுகிறார்கள்’ என்றார்.

மானேர் தொகுதியில் வெற்றி பெற்ற பாய் வீரேந்திரா கூறுகையில்,’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. நாங்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தலை நடத்த கோரிக்கை வைப்போம்’ என்றார். பர்பட்டா தொகுதியில் தோல்வியடைந்த சஞ்சீவ் குமார் கூறுகையில், ‘முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்த பிறகு நீதிமன்ற த்தில் வழக்கைத் தொடர திட்டமிட்டுள்ளோம். சுமார் 1.8 கோடி வாக்குகள் இந்தியா கூட்டணி வந்துள்ளன. அதைப் புறக்கணிக்க முடியாது’ என்றார்.

ெதாண்டர்கள் எதிர்ப்பு கோஷம்

இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருந்த தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளரான கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் யாதவுக்கு எதிராக ஆர்ஜேடி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். லாலுபிரசாத் குடும்ப பிரச்னை தொடர்பாக லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அவர் மீதுதான் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.