Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி

பூர்னியா: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ஜோக்தானி தானாபூர் வந்தே பாரத் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கதிஹார் ஜோக்பானி பிரிவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது 5 இளைஞர்கள்(14-19 வயதுக்குட்பட்டவர்கள்) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

வானம் மேகமூட்டம் காரணமாக கும்மிருட்டதாக இருந்ததால், ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.