ராம்பூர்: முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று கூறியதாவது: பிரதமர் மோடியை இரவும் பகலும் விமர்சித்து வரும் சகோதரத்துவ கட்சிகள் கூட்டணி அரசியல் கொள்கைகளை அவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். காங்கிரஸ் முழு பெரும்பான்மை பெற்றிருந்தால் அதன் கூட்டணி கட்சிகளை எந்த பயனும் இல்லாதது போல் தூக்கி எறிந்திருப்பார்கள்.
பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் முரண்பாடுகள் உள்ளன. அவை அதன் சொந்த முரண்பாடுகளால் சரிந்து விடும். காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் மாநிலங்களில் பீகாரும் சேர்ந்து விடும். இதே போன்று உபியின் அரசியல் களத்திலும் காங்கிரஸ்,சமாஜ்வாடி கட்சிகள் அகற்றப்படும்’’ என்றார்.
