புதுடெல்லி: பீகாரில் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.இதில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தன. பெயர் விடுபட்டவர்கள்,உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 1ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
+
Advertisement