வேலூர்: வேலூரில் நேற்று தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோவை வரும் பிரதமரிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைத்து, தேவையான திட்டங்களை பெறலாம். பீகார் தேர்தலில் புதியவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தவெக தலைவர் விஜய் பாடம் கற்க வேண்டும் என்பதுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பீகார் தேர்தலில் 64 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் போலி வாக்காளர்கள். அதுதொடர்பான புகார் வரவில்லை. ராகுல்காந்தி புகார் கூறுகிறார் என்றால், அதுதொடர்பான ஆவணங்களுடன் அவர் தேர்தல் கமிஷனை அணுக வேண்டும். எஸ்ஐஆர் விஷயத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement


