பீகார் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், பொருளாளர் அஜய் மக்கன், பீகார் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பீகாரில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 61 இடங்களில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, 2010 க்குப் பிறகு பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது மோசமான தோல்வியாக இது அமைந்தது. 2010ல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுபற்றியும், வாக்கு திருட்டு பற்றியும், தேர்தல் ஆணையம் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.


