புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள குடிமக்களை சேர்ப்பதற்கும், தகுதியற்ற பெயர்களை நீக்குவதற்குமான உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி கடைசிநாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி பிற்பகல் மூன்று மணி முதல் நேற்று பிற்பகல் மூன்று மணி வரை கட்சிகளால் நியமிக்கப்பட்ட எந்த பூத் நிலை முகவரும் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளை அணுகவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காகவோ அல்லது நீக்குவதற்காகவோ இதுவரை 1927 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரிகளை அணுகியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
+