கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா அளித்த பேட்டி: இந்தியா கூட்டணியில் புதியவர்கள் இணைவதால் விரிவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எதிர்க்கட்சியான மகாகத் பந்தன் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிறிய கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் இணக்கமாக இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்) கடந்த தேர்தலில் 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை பீகார் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று நம்புகிறேன். மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.